Thursday, December 15, 2011

கண்ணா! கண்ணா! ஆனந்தக் கண்ணா!


கண்ணா! கண்ணா! ஆனந்தக் கண்ணா!
ஓடக்குழலும் கொண்டோடிவா கண்ணா!
தேவகி தந்ததோர் கண்மணிக் கண்ணா!
ஆனந்தக் கண்ணா! ஓடிவா கண்ணா!

காளிய நர்த்தனம் செய்ததோர் கண்ணா
ஆனந்தக் கண்ணா ஓடிவா கண்ணா!
கோவர்த்தனகிரி தூக்கிய கண்ணா
ஆனந்தக் கண்ணா ஓடிவா கண்ணா!

கம்ஸனை நிக்ரகம் செய்ததோர் கண்ணா
ஆனந்தக் கண்ணா ஓடிவா கண்ணா!
பக்தரைப் பாலிக்கும் கண்ணா கண்ணா
ஆனந்தக் கண்ணா ஓடிவா கண்ணா!

Monday, September 12, 2011

ஆருடம் ஒன்று சொல்லடி ..


வரிகள் : ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்
ராகம் : கல்யாணி
தாளம் : ஆதி


ஆருடம் ஒன்று சொல்லடி - என்
அந்தரங்க சிந்தையுடன் வந்து உறவாடின
நந்த முகுந்தன் எந்த நாளும் அகலாதிருக்க ( )

பாரோடு விண்ணாகப் பரந்திருந்தானே
பச்சைப் பிள்ளைத்தனம் போகவில்லையே மானே
ஆரோடு சொல்வேனோ அந்தரங்கம் தானே
அந்தரங்கம் ஆனாலும் சிந்தை நாணம்தானே ( )

அலைந்து வெண்ணை திருட அதிலென்ன இருக்கோ
அத்தைமகன் மேலேயும் இவனுக்கென்ன வெறுப்போ
ஒரு பிடி அவலுக்கு உலகம்தான் கணக்கோ
உள்ளதைச் சொல்லப்போனால் உனக்கென்ன சிரிப்போ.. ( )

அச்சம் இல்லாமல் அரவமேலே நின்றாடுவான்
ஆரும் அழைக்க வந்தால் அவர் பின்னே ஓடுவான்
மிச்சம் மீதி இல்லாது வெண்ணை களவாடுவான்
வேண்டாமே கண்ணா என்றால் வேணவழக்காடுவான்..( )