Monday, September 12, 2011

ஆருடம் ஒன்று சொல்லடி ..


வரிகள் : ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்
ராகம் : கல்யாணி
தாளம் : ஆதி


ஆருடம் ஒன்று சொல்லடி - என்
அந்தரங்க சிந்தையுடன் வந்து உறவாடின
நந்த முகுந்தன் எந்த நாளும் அகலாதிருக்க ( )

பாரோடு விண்ணாகப் பரந்திருந்தானே
பச்சைப் பிள்ளைத்தனம் போகவில்லையே மானே
ஆரோடு சொல்வேனோ அந்தரங்கம் தானே
அந்தரங்கம் ஆனாலும் சிந்தை நாணம்தானே ( )

அலைந்து வெண்ணை திருட அதிலென்ன இருக்கோ
அத்தைமகன் மேலேயும் இவனுக்கென்ன வெறுப்போ
ஒரு பிடி அவலுக்கு உலகம்தான் கணக்கோ
உள்ளதைச் சொல்லப்போனால் உனக்கென்ன சிரிப்போ.. ( )

அச்சம் இல்லாமல் அரவமேலே நின்றாடுவான்
ஆரும் அழைக்க வந்தால் அவர் பின்னே ஓடுவான்
மிச்சம் மீதி இல்லாது வெண்ணை களவாடுவான்
வேண்டாமே கண்ணா என்றால் வேணவழக்காடுவான்..( )